முதல்வர் ரோலில் விஜய் சேதுபதி - அதிரடியாக தயாராகும் Biopic..!

Vijay Sethupathi Tamil Cinema
By Thahir Aug 03, 2023 02:41 AM GMT
Report

கர்நாடகா மாநில தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் biopic'இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இணையத்தில் வைரல் 

தமிழ் மொழி படங்களை தாண்டி இந்தியாவின் பல மொழி படங்களிலும் நடிகர் விஜய் சேதுபதி பிஸியான நடிகராக வளம் வருகிறார்.

முதல்வர் ரோலில் விஜய் சேதுபதி - அதிரடியாக தயாராகும் Biopic..! | Vijay Sethupathi In The Role Of Chief Minister

தற்போது அவர், ஹிந்தியில் ஷாருக் கானுடன் ஜவான், கத்ரீனா கைப்புடன் மேரி கிறிஸ்துமஸ், தமிழில் விடுதலை பாகம் இரண்டு, காக்கா முட்டை மணிகண்டனுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படஙக்ளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது அவரின் மற்றொரு படம் குறித்தான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல்வர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி 

கர்நாடக மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் வாழக்கை வரலாற்றை தழுவி தற்போது biopic ஒன்று உருவாகவுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் என கூறப்படும் இந்த படத்தில் தற்போது, நடுத்தர வயது சித்தராமையாவின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.