விஜய் சேதுபதி நடிக்கவிருந்த வில்லன் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமானார் பஹத் பாசில்

vijay sethupathi villain Fahadh Faasil
By Jon Mar 23, 2021 03:32 PM GMT
Report

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் வில்லனாக பஹத் பாசில் ஒப்பந்தமாகியுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். த

மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.