மறைந்த இயக்குனருக்கு மரியாதை செலுத்திய விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி உழைப்பாளர் தினத்தில் மறைந்த இயக்குனருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.

உழைப்பாளர்கள் தினத்தில் மறைந்த இயக்குனருக்கு மரியாதை செலுத்திய விஜய்சேதுபதி. இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக எஸ்.பி.ஜனநாதன் காலமானார். நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்