பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல்

Airport Attack Vijay Sethupathi Bangaluru
By Thahir Nov 03, 2021 01:30 PM GMT
Report

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார்.

அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.