விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட விவகாரம்: போலீசார் வழக்குப்பதிவு

Police Airport Attack Vijay Sethupathi File
By Thahir Nov 06, 2021 08:30 AM GMT
Report

பெங்களூரு விமான நிலையத்தில் அடையாளம் தெரியதாக நபரால் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது.

இதனை தொடர்ந்து அவரை தாக்கிய நபர் யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது பெங்களூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்து செல்லும் நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த நபர் ஒருவர், எகிறி எட்டி உதைத்த காட்சியைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியை தாக்கிய நபரை பிடித்து விசாரித்த போது,

விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர்.

அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.