அடுத்தவன் விஷயத்துல எதுக்கு மூக்கை நுழைக்கிறீங்க..? - கேள்வி கேட்ட நிருபருக்கு விஜய்சேதுபதி பதிலடி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி வெளிவர உள்ளது. இப்படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இரண்டு பேரை காதலிக்கிறார். இப்படத்திற்கான அடுத்தடுத்து டிரைலர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவனுக்காக மட்டும் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஜய்சேதுபதி. சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி பேட்டி கொடுத்தார்.
அந்தப் பேட்டியில் நிருபர் ஒருவர், இந்தப்படத்தில் 2 பெண்களை காதல் பண்ற மாதிரி கதை இருக்கிறது. உண்மையில் நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், சற்று விஜய் சேதுபதி கடுப்பாகி விட்டார். காதலித்தேன், காதலிக்கல... இத எப்படிங்க சொல்ல முடியும்... பெர்சனல்... பெர்சனல எதுக்கு நோண்டுரிங்க... அடுத்தவர் விஷயத்துல எதுக்கு மூக்கை நுழைக்கிறீங்க.. மாதிரி சற்று கோபத்துடன் பதிலளித்தாராம்.