பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன் விஜய் சொன்ன அந்த “ஒரு”வார்த்தை - உண்மையை போட்டுடைத்த சஞ்சீவ்
பிக்பாஸ் நிகழ்ச்சி செல்வதற்கு முன், பின் நடிகர் விஜய் என்ன சொன்னார் என்பதை நடிகர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் பெரும்பாலான மக்களின் மனதை கவர்ந்தவர்களில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் 50 நாட்களுக்குப் பின் நுழைந்த நடிகர் சஞ்சீவும் ஒருவர்.
மிகவும் சென்ட்டிமென்டான ஒரு நபராகவும் அனைவருடனும் பழகிய அதே சமயத்தில் நேர்மையாகவும் நடந்து கொண்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தன் குடும்ப நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தன்னை பார்க்கும் வரை உள்ளே இருந்தால் போதும் என்பது போது அவர்கள் வந்த அடுத்த எலிமேஷனிலேயே சஞ்சீவ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
சஞ்சீவ் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் முன்னும், சென்று வந்த பிறகும் விஜய் தன்னிடம் என்ன கூறினார் என்பதை பற்றி வெளிப்படையாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
அதில் விஜய் கிட்ட முதலில் சொல்லும் போது சிரிச்சான். பிக்பாஸுக்குள்ள போய் நீ சமாளிச்சுடுவீயா? என்று கேட்டான். பிறகு "கூப்பிடுறாங்க! போறேன், போயி என்னதான் நடக்குதுனு பார்ப்போம் என்று கூறினேன். அதற்கு விஜய் என்னத்துக்கு கூப்பிடுறாங்க? உள்ள போயி என்ன பண்ணுவ நீ? என கேட்க முடிஞ்ச அளவுக்கு ஜாலியா இருப்பேன், ஏதாச்சு பிரச்சினை என்றால் நாமளும் பண்ண வேண்டியது தான் என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
பின்னர் என்ன தோணுதோ.. அதை பண்ணி.. ஒரு கலக்கு கலக்கிட்டு வா! ஆல் தி பெஸ்ட்" என்ற தளபதி விஜய் பின் சஞ்சீவ் வெளியே வந்ததும் "நீ உள்ளே போன போது எப்படி போனீயோ அது வேற.. நீ வெளிய வரும் போது ரொம்ப நல்ல பெயரோட வெளிய வந்து இருக்கனு எல்லாருமே சொல்றாங்க. நீ போனதால நானும் ஷோவை கொஞ்சம் ரெகுலரா பார்த்தேன். உன் கேம் நல்லா இருந்துச்சு! என தெரிவித்துள்ளார்.