‘வாரிசு’ படத்தின் லீக்கான வீடியோ, புகைப்படங்களை பகிர வேண்டாம் - நடிகர் விஜய் மகன் சஞ்சய் வேண்டுகோள்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பீஸ்ட் திரைப்படம்
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு உட்பட பலர் இணைந்து நடித்தனர்.
வாரிசு திரைப்படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66வது படமான வாரிசு திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் விஜய் பணியாற்றி வருகிறார். ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
நடிகர் விஜய் மகன் சஞ்சய் வேண்டுகோள்
இந்நிலையில், 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "வாரிசு படத்தின் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Don't Share any leaked pics and videos from #Varisu
— Sanjay Vijay (@IamJasonSanjay) August 22, 2022