முதல்வர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு.., ஜூன் 15ஆம் தேதி விசாரணை
சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில், முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டில், விஜய் ஒரு பிரபல திரைப்பட நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை தான் கண்டுபிடித்ததாக சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.
அந்த உறவை கைவிடுவதாக விஜய் கூறிய நிலையிலும், அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் பழகி வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் தனக்கும் தனது பிள்ளைளுக்கும் கடுமையான அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து தனக்கு விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்கீதா தனது மனுவில் கோரியுள்ளார்.
அதன்படி, சங்கீதா தொடர்ந்த இந்த விவாகரத்து மனு மீதான முந்தைய விசாரணையின் போது இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதில் இரு தரப்புமே நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருவரும் அவர்களின் வழக்கறிஞர்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராவார்கள் என்றும் கூறப்படுகிறது.