பிரபல நடிகையுடன் நெருக்கம் காட்டும் நடிகர் விஜய்...? - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்...! கலக்கத்தில் ரசிகர்கள்..!

Vijay Keerthy Suresh Sangeetha Vijay
By Nandhini 1 வாரம் முன்

பிரபல நடிகையுடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாக வெளியான தகவலை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

vijay-sangeetha-keerthy-suresh

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

இந்நிலையில், நடிகர் விஜய்யும், நடிகை கீர்த்தி சுரேஷும் நெருக்கமான உறவு இருப்பதாக சமூகவலைத்தளங்களில் சில நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது.

நடிகையான கீர்த்தி சுரேஷும், நடிகர் விஜய்யும் ‘பைரவா’, ‘சர்க்கார்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். நடிகர் விஜய் தனது மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டு கீர்த்தி சுரேஷைதான் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று ஒரு பக்கம் குரல் ஒலிக்க, இன்னொரு பக்கம் இப்படி ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சோஃபாவில் அமர்ந்திருக்கும் நடிகை கீரத்தி சுரேஷ் தரையில் அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்யின் காலை மிதித்தப்படி இருக்கும் போட்டோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். அண்ணி பாவம், அண்ணிக்கு எப்படி விஜய்ணா துரோகம் செய்தீர்கள் என்று சாடி வருகின்றனர். #JusticeForSangeetha என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட்டாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான வாரிசு படத்தை தன் மனைவி சங்கீதாவுடன் பார்த்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். ஆனால், மீண்டும், மீண்டும் விஜய்யை நெட்டிசன்கள் ட்ரோலாக்கி வருவது விஜய் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது.