விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம்
விஜய் விவாகரத்து வழக்கு
தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனால் தானும் பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அப்போது தேர்தல் பணி மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரினர்.

நீதிபதி மாற்றம்
இந்த வழக்கு யூன் 15ம் தேதி விசாரணைக்கு வரும் என நீதிபதி ஒத்திவைத்தார், இந்நிலையில் தற்போது வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேரில் வரமுடியாத நிலையில் Video Callல் ஆஜராவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது, அனுமதி வழங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
