விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
ஜூன் மாதம் 15ம் தேதி நேரில் ஆஜராக விஜய் மற்றும் சங்கீதா-வுக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து கோரி விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி இணையவழியில் சங்கீதா மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், திருமணத்தை மீறிய உறவில் நடிகர் விஜய் இருப்பதாகவும் கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தானும், தன் பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், இதுதொடர்பில் விஜய்யை தனிப்பிட்ட முறையில் சந்தித்து பேசிய போதும் தீர்வு எட்டவில்லை என்பதால் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்று நேரில் ஆஜராகுமாறு விஜய்- சங்கீதாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் காணொலி வாயிலாக ஆஜராவார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களாக ஆஜராகாததால் ஜூன் மாதம் 15ம் தேதி நேரில் வர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
