தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் - சங்கீதாவின் விவாகரத்து வழக்கு இன்று விசாரனைக்கு வரவிருந்த நிலையில், இது தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரவு உத்தரவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 26ஆம் திகதி அன்று முதல் முறையாக விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கு, அதாவது இன்று தேர்தலுக்கு சரியாக 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில். இன்று, விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முதற்கட்ட விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இருப்பினும் தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்டவையால் விஜய்யும் சங்கீதாவும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை நீதிபதி விசாரித்த நிலையில், வருகிற ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.