உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்: பிரசாரத்தில் திமுகவை விளாசிய விஜய்

Vijay Tamil nadu Election TVK
By Vinoja Apr 08, 2026 09:40 AM GMT
Report

தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் வாங்கிவிட்டார், ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்முடன் தான் நிற்கின்றது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திருநெல்வேலியில் தமிழக வெற்றி கழகத்தின் வேற்பாளர்களை ஆதரித்து குறித்த கட்சியின் தலைவர் இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தின் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம்: பிரசாரத்தில் திமுகவை விளாசிய விஜய் | Vijay Said True Congress Party Stands With Tvk

அதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது திமுகவிடம் முழு அதிகாரம் இல்லை. இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது.முட்டுக்கட்டை போட்டு நடக்கவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரம் அற்ற முதல்வராக இருப்பதால் தான் நான் வந்திருக்கிறேன். 

திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெளியே வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் இரண்டு பேரும் ஒன்றுதான். இரண்டு பேருக்கும் ஒரே நோக்கம் தான். மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்துவிடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். விஜய் வந்ததில் இருந்து அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் என் மீது செம கோபத்தில் உள்ளனர். 

கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டார்கள்.. ஜனநாயகன் படத்தை முடக்கி பார்த்தார்கள்.. அதனை யார் முடக்கியது என்றே உங்களுக்கு தெரியும்.. ஆனால் திமுக, பாஜக மற்றும் பலராலும் என்னை மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முடியாது.

நிச்சயமாக தவெக ஆட்சி அமைக்கும். நிச்சயமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.