விஜய்க்கு பாதுகாப்பு இல்லை! அமித்ஷாவுக்கு தவெக கடிதம்
விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்-கிடம் எஸ்.ஆனந்த் மற்றும் ஆதர் அர்ஜீனா புகார் அளித்தனர்.
அதில் தவெக சார்பில் பிரசாரம் மேற்கொள்ளும் போது காவல்துறை முறையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த போது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்கிறார்கள், ஆனால் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ள ஒருவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
