ஜனநாயகன் லீக்கானதற்கு எல்.முருகன் தான் காரணம்- செங்கோட்டையன் குற்றச்சாட்டு

JanaNayagan
By Yashini Apr 13, 2026 07:11 AM GMT
Report

ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் வெளியானதற்கு எல்.முருகன் தான் காரணம் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது அவர் பேசுகையில், திமுக-வை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் ஆசை.

தேர்தலில் 10 முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுக-வை வீழ்த்த முடியாது, திமுக -வை தோற்கடிக்க ஒரே சக்தியாக தவெக விஜய் திகழ்கிறார், மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என விஜய் உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.  

ஜனநாயகன் லீக்கானதற்கு எல்.முருகன் தான் காரணம்- செங்கோட்டையன் குற்றச்சாட்டு | Vijay S Jana Nayagan Controversy Explained

மேலும் ஜனநாயகன் படத்தை வெளியிட்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள், இதற்கு காரணம் எல்.முருகன் தான், அந்த துறைக்கான அமைச்சர் அவர் தான்.

சட்டவிரோதமாக படம் வெளியானால் யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிக்கையாளர தான் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.