ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை என்று நடிகர் விஜய் தரப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் கொரோனா நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளது