குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி
india
corona
politician
By Jon
இந்தியாவில் நாள் தோறும் கொரோனா தொற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு 10000-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது. மரணங்களும் நீண்ட நாட்களுக்குப் பிறகு 100-க்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நேற்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி கீழே வந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.