எமனாக மாறிய அதிர்ஷ்ட எண்- வைரலாகும் சோகச்செய்தி
விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்தும் 1206 என்ற எண்ணுடன் தான் இருக்கும். இவ்வளவு பாதுகாப்பாக இருந்த இவர், விமான விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி லண்டனில் வசித்து வரும் தன்னுடைய மகனை காண அகமதாபாத்தில் இருந்து விமானத்தில் சென்ற பொழுது விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர், குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி பிரதமரானதால், விஜய் ரூபானி முதலமைச்சரானார்.
கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், கடந்த 2021 செப்டம்பர் மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜக நாடாளுமன்றக் குழுவின் மத்திய பார்வையாளர், மகாராஷ்டிராவில் முதல்வர் தேடுதல் குழு உறுப்பினர் எனக் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
1206 எண்ணிற்கு பின்னால் இருக்கும் உண்மை
இதற்கிடையே, விஜய் ரூபானி பயன்படுத்தும் ஸ்கூட்டர், கார் எனத் தனது தனிப்பட்ட வாகனம் எதுவாக இருந்தாலும் அவரின் பதிவெண் 1206 தான். அவர் வாங்கிய முதல் ஸ்கூட்டரில் இந்த நம்பர் தான் உள்ளது. அதேபோல் காரிலும் இதே நம்பர் இருந்துள்ளது.
இந்த எண் தான் விஜய் ரூபானியின் கடைசி எண்ணாகவும் அமைந்துள்ளது. ஏனெனின் நேற்றைய தினம் நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, நேற்றைய தினம் ஜூன் 12, பல வருடங்களாக விஜய் ரூபானி நம்பிய அதே அதிர்ஷ்ட எண் தான் அவருடைய கடைசி வரை வந்துள்ளது.
விஜய் ரூபானி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
