பஞ்சாயத்தை முடிச்சிரலாம் - முடிவுக்கு வந்த விஜய் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு
தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை தள்ளுபடி செய்யக்கோரி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்.
கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை பயன்படுத்துவதில்லை என்பதால் அந்த காருக்கான நுழைவுவரியை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க கோரி விஜய் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தியதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தமிழக அரசு விளக்கத்தை ஏற்று விஜய் வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.