விஜய் சொகுசு கார் விவகாரம் என்னங்கண்ணா இது ..களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள் சூடாகும் டிவிட்டர் தளம்!
சொகுசு கார் விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு அபராதம் அளித்து ஹைகோர்ட் அறிவுரை கூறியதை தொடர்ந்து #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்
. நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நடிகர் விஜய்க்கு பல்வேறு அறிவுரைகளை கூறி சினிமா நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும்.
வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் கூறினார்.
மேலும் வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் காட்டமாக தெரிவித்தார்.
மேலும் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்று கூறி விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி.
இதனை தொடர்ந்து #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக்ஸ் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது. விஜய் ஏற்கனவே வரியை கட்டிவிட்டார் என்று டிவிட்டி வரும் ரசிகர்கள் அதற்கான பில்லையும் ஷேர் செய்து வரும் ரசிகர்கள் வரிக்கட்டிய பில் ரசீதினை என்னங்கண்ணா இது என விஜய் ஸ்டைலில் பதிவிட்டு வருகின்றனர்.
