திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் விஜய்?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்றும், திருச்சி கிழக்கு தொகுதியில் 91 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் சுமார் 27, 416 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-வின் இனிகோ இருதயராஜை வீழ்த்தியுள்ளார்.
ஒருவர் 2 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும்.
அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.
அப்படி நடக்கும் பட்சத்தில் அத்தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும், தவெக சார்பில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.