இளைய காமராஜர் நான் அல்ல.. விஜய் அதிரடி முடிவு
“இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் ” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருது விழா
தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாணவர்களை அழைத்து விருது வழங்கி பாராட்டியுள்ளார்.
கடந்த மே 30 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக ஜூன் 4 பரிசளிப்பு விழா நடைபெற்ற நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் இன்றைய தினம் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
மக்களுக்கு விடுத்த கோரிக்கை
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக நடிகர் விஜய் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
அதில், “குஜராத் விபத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்ப்பதற்கு மனம் பதறுகிறது, அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை. என்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம். 2026 தேர்தல், அரசியல் பற்றியெல்லாம் இந்த மேடையில் பேச வேண்டாம்.. என அறிவுறுத்தினார்.
குஜராத் விமான விபத்து தொடர்பில் பேசிய விஜய் மாணவர்களுடன் சேர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து “பள்ளி ஆசிரியர்கள் பற்றி பேசுங்கள்” என கோரிக்கையும் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழிவாங்கும் படலம் ஆரம்பம்...! சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல் IBC Tamil

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
