கைகோர்ப்போம் துயர்துடைப்போம் - மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய் முக்கிய உத்தரவு!
மிக்ஜாம் புயலால் சென்னையில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை வெள்ளம்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை சென்னையை புரட்டிப்போட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கனமழை ஓய்ந்துள்ளதால் சில இடங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்து வருகிறது. ஆனால் சில இடங்களில் மழை நீர் வடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பலர் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விஜய்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என விஜய் பதிவிட்டுள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மீது துப்பாக்கிச் சூடு! பண்ணையாளர்கள் அச்சம் IBC Tamil