வாரிசு - துணிவு ரிலீஸ் போட்டி : விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்

Ajith Kumar Vijay Varisu Thunivu
By Irumporai Dec 06, 2022 09:44 AM GMT
Report

துணிவு பட ரிலீஸ் குறித்து விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவலை நடிகர் ஷாம் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் விஜய் அஜித் படங்கள்

விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.அதே சமயம் அஜித்தின் 'துணிவு' படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

குறிப்பாக எட்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாக உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் குஷியில் உள்ளனர்.

வாரிசு - துணிவு ரிலீஸ் போட்டி : விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல் | Vijay Reaction To Varisu Vs Thunivu Release

இந்த நிலையில் அஜித்தின் துணிவு படம் குறித்து விஜய் பாராட்டியதாக நடிகர் ஷ்யாம் கூறியுள்ளார்.நடிகர் அஜித் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்று விஜய்யிடம் ஃபோனில் கூறினேன். 

நண்பர் படம் வரட்டுமே

அதற்கு அவர், நண்பர் படம் வரட்டும்பா, நன்றாக ஓடட்டும்பா என்றார் என தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் ஷாம். மற்ற நடிகர்களின் படங்களும் ஓட வேண்டும் விஜய்யின் நல்லெண்ணத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

2014 பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் ஒன்றாக வெளியாகியிருந்தது. அப்போதும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் விஜய்.