விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா நாளை திருமணம்?
நேஷனல் க்ரஷ் என கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், அவரது காதலரான விஜய் தேவரகொண்டாவுக்கு நாளை திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கன்னட திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா, பான் இந்தியா ஹீரோயினாக வலம்வந்தார். தெலுங்கு, தமிழ், பாலிவுட் என ஹிட் படங்களை கொடுத்துள்ள ராஷ்மிகாவை, நேஷனல் க்ரஷ் என கொண்டாடுகிறார்கள்.

இந்நிலையில் அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கு நாளை திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது, ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை.

நாளை உதய்பூரில் சிட்டி பேலஸில் திருமணம் நடக்கவுள்ளதாகவும், அதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தான்யா என்பவர் வீடியோவை வெளியிட திருமண தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.