விஜய்யுடன் ராஷ்மிகா எடுத்த செல்ஃபி - இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் விஜய்யுடன் நடிகை ராஷ்மீகா எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
‘பீஸ்ட்’ திரைப்படம்
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு உட்பட பலர் இணைந்து நடித்தனர்.
‘வாரிசு’ திரைப்படம்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66வது படமான ‘வாரிசு’ திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் விஜய் பணியாற்றி வருகிறார்.
‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகை ராஷ்மிகா செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -
Thalaivaa❤?@actorvijay #Varisu #ThalapathyVijay pic.twitter.com/sCHosCXjtj
— Bhairava Mani (@bhairavamani) September 14, 2022