சூப்பர் ஸ்டார்ன்னா அவர்தான்... - விஜய்யை மறைமுகமாக குத்திக் காட்டிய எஸ்.ஏ. சந்திரசேகர் - கடுப்பான ரசிகர்கள்...!
‘வாரிசு’ படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.
இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.
கடந்த 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.
விஜய்யை குத்திக் காட்டிய எஸ்.ஏ. சந்திரசேகர்
நடிகர் ரஜினிகாந்த்தை ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ஆனால், அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைவதற்கு பல போட்டிகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்து வருகிறது. நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேச்சுகள் பரவ, ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ரஜினி குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நடிகர் ரஜினி என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் தலைக்கனம் இல்லாதவர். நான் ஒரு கண்டக்டர் என்ற மனநிலையுடன் தான் மறுநாள் காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வருவார்.
அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருக்கிறார். அவருடைய அந்த பழக்கத்தை நான் தினமும் கடைபிடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது என்னுடைய பழைய வாழ்க்கையை நினைத்துக் கொள்வேன் என்றார். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த விஜய் நடிகர்கள்.. என் தளபதியை இவர் மறைமுகமாக விஜய்யையும் குத்தி காட்டி பேசி உள்ளார் என்றும், இவருக்கும், விஜய்க்கும் கருத்து வேறுபாடு உள்ளது. ஆதலால்தான் இவர் இப்படி பேசுகிறார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.