புனீத் வீட்டில் தொடரும் சோகம் - விஜய் ராகவேந்திரா மனைவி காலமானார்.
கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பில் திடீரென உயிரிழந்துள்ளார்.
விஜய் ராகவேந்திரா
கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரனான விஜய் ராகவேந்திர தொடர்ந்து கன்னட படங்களில் பிஸியான நடிகராக வளம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது நாயகனாக 50 படங்களை கடந்து அவர் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர்.

இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்பந்தனா என்ற மகன் உள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் ராகவேந்திர ஓய்விற்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். தாய்லாந்து நாட்டிற்க்கு இவர்கள் சென்ற நிலையில், ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படும் சிகிச்சை பலனின்றி இன்று ஸ்பந்தனா உயிரிழந்துள்ளார். விஜய் ராகவேந்திரா மற்றும் ஸ்பந்தனா தம்பதிகள் தங்களது 16-வது திருமண தினத்தை இன்னும் 19 நாட்களில் கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil