அதிமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்- விஜயபிரபாகரன் திட்டவட்டம்

dmk dmdk aiadmk prabhakar
By Jon Mar 10, 2021 02:50 PM GMT
Report

அதிமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்தது .

கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்ட தேமுதிகவுக்கு 15 முதல் 17 தொகுதிகள் மட்டுமே அதிமுக கொடுத்தது. இதனால், உடன்பாடு ஏற்படாத நிலையில் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது. கூட்டணியில் இருந்து வெளியேறிய அடுத்த நொடியில் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது தேமுதிக.

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிகவினருக்கு இன்றுதான் தீபாவளி என்றும் அக்கட்சியின் துணை செயலாளர் எல் .கே.சுதீஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிங்கம் குகையிலிருந்து வெளியே வந்துவிட்டது இனி வேட்டை தான் என்றும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைய தேமுதிக உழைக்கும் என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விஜயகாந்த் மகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேமுதிகவை கட்டிக்காக்கவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருபவர் கேப்டன். என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக நன்றாக உழைப்பேன். இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. 10 ஆண்டுகளாக திமுகவை வாழவைக்கும் இனி நாங்கள் நன்றாகவே வாழ்வோம் என்றார்.