தம்பி வா தலைமை ஏற்க வா .. சலசலப்பை ஏற்படுத்திய விஜய் போஸ்டர்
நடிகர் விஜய்யின் ஒவ்வொரு பிறந்த தினத்தின் போதும் அவரது ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம். சர்ச்சையும் ஏற்படுத்துவது வழக்கம்தான்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் செங்கோல் பிடித்துக்கொண்டிருக்கும் படத்தினை வைத்து, விஜய்யும் அவரது மனைவியும் செங்கோல் பிடித்துக்கொண்டிருப்பது வெளியிட்ட போஸ்டரால் பெரும் சர்ச்சை எழுந்தது.
எம்.ஜி.ஆர் போன்று பல போஸ்டர்கள் ஒட்டி நிறைய சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், வரும் 22ம் தேதி அன்று விஜய் பிறந்த நாள். இதை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில்,ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா தலைமை ஏற்க வா என திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விஜய்யை அழைப்போதுல் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தம்பி வா தலைமை ஏற்க வா' என்று பேரறிஞர் அண்ணா, கருணநிதியை அழைத்தது போல், திமுகவுக்கு தலைமை ஏற்க விஜய்யை ஸ்டாலின் அழைப்பது போல் திண்டுக்கல் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டிய போஸ்டர்கள், அம்மாவட்டத்தில் மட்டுமல்லாது திமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.