நடிகை விஜய் மிகவும் இனிமையானவர் நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்
நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நெல்சனின் டாக்டர் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பூஜா, ஒரு வார்த்தையில் பதில் சொல்வது கடினம்.
இருப்பினும் முயற்சிகிறேன். அவர் மிகவும் இனிமையானவர் என்று பதிலளித்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.