விஜய் அரசியலில் மாற்றம் கொண்டுவருவாரா ? - குஷ்பு அளித்த பதில்!
விஜய் அரசியலில் மாற்றம் கொண்டுவருவாரா என 2026ல் தான் தெரியும் என்று பாஜக நிர்வாகி குஷ்பூ தெரிவித்துள்ளார்.
குஷ்பூ
சென்னை திநகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் ,78 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றி குஷ்பூ உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் பாஜக நிர்வாகி குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,'' தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலக அழுத்தம் கொடுக்கப்பட்டதா ? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்த அவர் ,எந்தவொரு அழுத்தம் காரணமாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
விஜய் அரசியல்
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டேன்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சி சார்பாக எதுவும் பேச முடியவில்லை. பாஜக அலுவலகத்திற்கும் வர முடியவில்லை என்றும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச முடியவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , கட்சி பணிகளில் சுதந்திரமாக ஈடுபட மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தேன் என தெரிவித்தார். மேலும் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவருக்கு என்ன அறிவுரை வழங்க உள்ளீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
விஜய் ரொம்ப புத்திசாலி. அவருக்கு அட்வைஸே தேவை இல்லை தம்பி விஜய் அரசியலில் மாற்றம் கொண்டுவருவாரா என 2026ல் தான் தெரியும் என்று பாஜக நிர்வாகி குஷ்பூ தெரிவித்துள்ளார்.