வீடியோ மூலம் பிரசாரம் செய்ய விஜய் திட்டம்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Apr 01, 2026 03:56 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கல் பிரசாரம் என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தவெக விஜய்

முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்துள்ள நிலையில், திருச்சி கிழக்கில் நாளை வேட்புமனுதாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

வீடியோ மூலம் பிரசாரம் செய்ய விஜய் திட்டம் | Vijay Plan To Video Campaign Tvk Updates

குறித்த வேட்பு மனுவில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் கடன் கொடுத்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளது விமர்சனங்களுக்கு ஆளானது.

விஜய் பிரசாரம்

வேட்பு மனுதாக்கல் செய்த அன்றே பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கிய விஜய் வழக்கம் போல் திமுக-வை கடுமையாக விமர்சித்தார், தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த போதே பாதியிலேயே ரத்து செய்துவிட்டு கிளம்பினார்.

பொலிசார் ஒழுங்காக ஒத்துழைப்பு வழங்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

வீடியோ மூலம் பிரசாரம் செய்ய விஜய் திட்டம் | Vijay Plan To Video Campaign Tvk Updates

வீடியோ பிரசாரம்

இந்நிலையில் வரலாற்றில் புதிதாக வீடியோ மூலம் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

முக்கியமான தொகுதிகளுக்கு மட்டும் சென்றுவிட்டு, மற்ற தொகுதிகளுக்கு வீடியோ மூலம் பேசவுள்ளாராம்.

அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே வீடியோ இருப்பதாகவும், கூட்டங்கள் நடைபெறும் போது திரையில் அதை போட்டுக்காண்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.