தவெகவின் அடுத்த மாநில மாநாடு - எங்கே தெரியுமா?
தவெக 2வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மீது இளைய தலைமுறை வாக்காளர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆட்சியில் பங்கு என அறிவித்தும் எந்த கட்சிகளும் தற்போது வரை கூட்டணியில் இணையவில்லை. தவெகவை காட்டி, காங்கிரஸ் திமுகவிடம் கடந்த தேர்தலை விட 3 தொகுதி அதிகமாக பெற்றுள்ளது.
இதனால், தவெக முதல் தேர்தலில் தனித்தே 234 தொகுதிகளிலும் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் தவெக தலைவர் விஜய், 3வது மாநில மாநாட்டை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக 3வது மாநில மாநாடு
மார்ச் இறுதியில் திருச்சியில் தவெகவின் 3வது மாநில மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலும், 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினத்தன்று தவெக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அருண்ராஜ் தலைமையிலான தவெக அறிக்கை தயாரிப்பு குழு, 5 மண்டலங்களில் கருத்துக்கேட்பு நடத்தி தவெக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது.