சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்: முதலமைச்சர் விஜய்
நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் விஜய்யின் எக்ஸ் தள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.
