போதைப்பொருள் விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய்

Vijay
By Fathima Jun 26, 2026 02:54 AM GMT
Report

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ”Start Run, Stop Drugs" என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

அண்ணா நினைவிடம் அருகே முதலமைச்சர் விஜய் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து அங்கே வைக்கப்பட்டிருந்த வெள்ளை போர்டில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து மாரத்தான் ஓட்டத்தில் விஜய் பங்கேற்றார், அவருடன் அமைச்சர்கள் சிலரும் பங்கேற்றனர், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஓடினர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் | Vijay Participated In The Awareness Run