10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் செய்யப்போகும் சிறப்பான சம்பவம் - வீடியோ இதோ..!
10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றவுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகளையும் படைத்தது.
கடைசியாக விஜய் நடித்த சில படங்களின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக நிகழ்ச்சியில் விஜய் பேசும் அரசியல் பல பரபரப்புகளை கிளப்பியது. இதனால் பீஸ்ட் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பாடல் வெளியீட்டு விழா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விஜய் சன் டிவி நிகழ்ச்சி ஏப்ரல் 10 ஆம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது. இதற்கான முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.