தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்

Vijay TVK
By Fathima May 10, 2026 03:42 AM GMT
Report

இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய்.

சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இன்று ஆட்சியமைக்கிறது.

இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் தலைமையில் 6000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், விஜய் வரும் வழி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விஜய்யுடன் இணைந்து என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ், ஆதவ் அர்ஜீனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், பி. வெங்கடரமணன், ஏ.ராஜ்மோகன், வி.எம்.எஸ். முஸ்தபா அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் மே 13ம் தேதிக்குள் தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.