பதவியேற்பு விழா ஒத்திவைப்பு - மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய்
பதவியேற்க அழைப்பு விடுக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளார்.
பதவியேற்பு விழா ஒத்திவைப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ க்கள் தேவைப்படும் நிலையில், 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி நேற்று தவெகவிற்கு தனது ஆதரவை வழங்கியது.

இதனையடுத்து, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகராய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.
மேலும், இன்று காலை 11;30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தற்போது வரை ஆளுநர் விஜய்க்கு அழைப்பு விடுக்காத நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுநரை சந்திக்கும் விஜய்
மேலும், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த முதல்வருக்குரிய பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஆட்சியமைக்க தாமதம் ஏற்படும் சூழல் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மீண்டும் தமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டுள்ளார்.
இன்று தமிழக ஆளுநர் கேரளா பயணம் செல்லவிருந்த நிலையில் அந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.