விஜய்க்கு அந்த சாதுர்யம் இருக்கா? உடம்பு ஃபுல்லா கண்கள் வேணும் - சாடிய துரைமுருகன்
கட்சி தலைவருக்கு உடல் எல்லாம் கண்கள் வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல்
அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “41 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் அவர் மீது குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
இதற்கு அவர் தான் பதில் கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர் பதிலும் கொடுக்கவில்லை, வெளியேயும் வராமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். இது எந்த அளவிற்கு அவருக்கு பலன் கொடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
துரைமுருகன் கருத்து
தாமதமானால், துக்கத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். இதை எல்லாம் எண்ணிப்பார்க்கும் அரசியல் சாதுர்யம் அவருக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. பல்வேறு குணங்களும், தொழில்களும் கொண்ட பல்வேறு மக்களை கொண்டது தான் கட்சி.
எனவே ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு இரண்டு கண்கள் அல்ல; உடல் முழுக்க கண்களாகவும், சிந்திக்கும் திறனும் இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய திறன் எந்தக் கட்சிக்கு இருக்கிறதோ,
அந்தக் கட்சி தான் செழிப்பாக இருக்கும், வெற்றி பெறும். அப்படி இல்லை என்றால் அந்தக் கட்சி குறுகிய காலத்தில் மறைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.