தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதானா? - வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் வீடியோ காலில் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Thalapathy recent Clicks ?❤️ #Thalapathy66 @actorvijay pic.twitter.com/dF6Z1fDPxp
— Thalapathy 66 (@Vijay66Film) May 10, 2022
இந்த படத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு விஜய் குடும்பக் கதையில் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேசமயம் விஜய் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் வீடியோ கால் பேசும் ஸ்க்ரீன் ஷாட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த பலரும் தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்அப் இதுதானா என கேள்வியெழுப்பி வருகின்றனர்.