மீண்டும் நடிகர் விஜய் வீட்டில் விலையுயர்ந்த கார் - ரகசியம் என்ன?

Vijay viral Indian film actor car photo
By Anupriyamkumaresan Oct 23, 2021 10:11 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பின்பு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தை நடிக்க இருக்கிறார்.

மீண்டும் நடிகர் விஜய் வீட்டில் விலையுயர்ந்த கார் - ரகசியம் என்ன? | Vijay New Car Photo Viral Issue Goes

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விஜய் ரோல்ஸ் ராய் கார் வாங்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இத்தகைய நிலையில், நீலாங்கரையில் இருக்கும் விஜயின் வீட்டிற்குள் விலை உயர்ந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கார் Mustang GT வகையைச் சேர்ந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.