'நா ரெடி தான்' பாடலின் கொரியன் வெர்ஷன்; மாஸ் காட்டிய கொரியன் பாடகர் - வீடியோ வைரல்!
தென் கொரிய பாடகர் ஒருவர் 'நா ரெடிதான்' பாடலின் கொரியன் வெர்ஷனை வெளியிட்டுள்ளார்.
லியோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலி கான், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் மும்முறையாக நடந்து வருகிறது . இந்த படம் வரும் அகக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து 'நா ரெடி தான்' என்ற பாடல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
கொரியன்
இந்த பாடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பல பேர் நடனமாடி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தென் கொரியா நாட்டை சேர்ந்த பாடகர் ஒருவர் 'நா ரெடி தான்' பாடலின் கொரியன் வெர்ஷனை பாடி வெளியிட்டுள்ளார்.. அது மட்டுமல்லாமல் அந்த பாடலுக்கு நடனமும் ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

இறுதி தருவாயில் மகிந்தவுக்கு அழைப்பு விடுத்த லசந்த: மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை IBC Tamil
