நாளை வெளியாகும் ஜன நாயகன் திரைப்படம்... அதிரடியாக விடுமுறை அறிவித்த நிறுவனம்

Vijay JanaNayagan
By Manchu Jul 22, 2026 02:17 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் நிறுவனம் ஒன்று விடுமுறை அளித்துள்ளது.

ஜனநாயகன்

தமிழக முதல்வரும், பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. பல போராட்டங்களுக்கு பின்பு இப்படம் வெளியாக உள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம், சென்சார் சான்றிதழ் உட்பட பல பிரச்சனைகளால் 6 மாதங்களுக்கு பின்பு வெளியாக உள்ளது.

நாளை வெளியாகும் ஜன நாயகன் திரைப்படம்... அதிரடியாக விடுமுறை அறிவித்த நிறுவனம் | Vijay Movie Jana Nayagan Release Half Day Leave

விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பயங்கர கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே 4 நாட்களுக்கான டிக்கெட் விற்கு தீர்ந்துள்ளது.

எப்பொழும் இளைய தளபதி விஜய், தளபதி விஜய் என்று வரும் பெயர் தற்போது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில் கார்ட் திரையில் தோன்றவிருக்கின்றது. 

டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி - மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி - மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

ரசிர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ-க்கள்,அமைச்சர்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள டிகே உணவு நிறுவனம் ஒன்று தான் நடத்தி வரும் மூன்று கிளைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஜனநாயகன் படத்தினை பார்ப்பதற்கு அரைநாள் விடுமுறை கொடுத்துள்ளது.