கவுண்டமணி,செந்திலை கிண்டலடித்த விஜய்; இயக்குனர் வெளியிட்ட அந்த வீடியோ - படுவைரல்!
நடிகர் விஜய், கவுண்டமணி- செந்தில் காமெடியை மிமிக்ரி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு தமிழ், மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். வருகின்ற ஜூன் 22ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘துப்பாக்கி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த படம் அவரது கரியரில் மிக முக்கிய படமாகும். எனவே இந்த விஷயம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து டெலிட்டட் சீன் ஒன்றை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நடிகர்கள் கவுண்டமணி- செந்திலின் வாழைப்பழ காமெடியை நடிகர் விஜய் மிமிக்ரி செய்து ஜாலியாக கிண்டலடித்திருக்கிறார். இதனை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்து,

‘மும்பை போலீஸாரைக் குஷிப்படுத்த கேப்டன் ஜெகதீஷ் கவுண்டமணி -செந்தில் காமெடியை மிமிக்ரி செய்திருக்கிறார்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Thuppakki - Deleted Scene ?
— Kathiresan ? (@Kathiresan_1995) June 8, 2024
The Epic scene of Goundamani & Senthil #TheGreatestOfAllTime #Thuppakki #TVKVijay @actorvijay #Thalapathy69 pic.twitter.com/timZcTkUnL
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil