ஆளுநரை சந்தித்த விஜய் - முதலமைச்சராக பதவியேற்க நேரம் குறிப்பு

Vijay Governor of Tamil Nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 06, 2026 11:08 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்துள்ள நிலையில், முதலமைச்சராக பதவியேற்க உள்ள நேரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரை சந்தித்த விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ் தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று தவெகவிற்கு ஆதரவளிப்பதற்கான ஆதரவு கடிதத்தை அளித்துள்ளது.

ஆளுநரை சந்தித்த விஜய் - முதலமைச்சராக பதவியேற்க நேரம் குறிப்பு | Vijay Met Tn Governor Cm Oath Cermony At 11 30

தற்போது 113 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், இன்னும் 5 எம்எல்ஏகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகராய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல் குமார், வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து நாளை காலை 11;30 மணியளவில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

மேலும், மே 9 ஆம் தேதிக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.