அப்பாவுடன் சண்டை? அவசரமாக வந்து தந்தையிடம் உருகிய விஜய் - வைரல் ஃபோட்டோ!

Chandrasekhar Vijay
By Sumathi Sep 14, 2023 04:01 AM GMT
Report

 நடிகர் விஜய் தனது பெற்றோரை சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்போது 'தளபதி 68' படத்தில் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் டெஸ்ட் ஷுட்டிற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.

அப்பாவுடன் சண்டை? அவசரமாக வந்து தந்தையிடம் உருகிய விஜய் - வைரல் ஃபோட்டோ! | Vijay Met His Father Photo Goes Viral

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இயக்குநரும், தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

 தந்தையுடன் சந்திப்பு

இதன் தகவல் அறிந்த நடிகர் விஜய் உடனடியாக அமெரிக்காவில் இருந்து கடந்து இரு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். உடனே, நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அப்பாவுடன் சண்டை? அவசரமாக வந்து தந்தையிடம் உருகிய விஜய் - வைரல் ஃபோட்டோ! | Vijay Met His Father Photo Goes Viral

தாய் தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் மோதல் என பரவி வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.