ஒரு தலைவன் உருவாகி விட்டாரா? வைரலாகும் விஜய் புகைப்படம் , அரசியல் வருகைக்கு முன்னோட்டமா ?

ThalapathyVijay Beast VijayMakkalIyakkam
By Irumporai Oct 27, 2021 07:22 AM GMT
Report

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் வெற்றிபெற்றனர்.

அவர்களை நடிகர் விஜய் நேற்று முன் தினம் (அக்டோபர் 25)  பனையூரில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்

ஒரு தலைவன் உருவாகி விட்டாரா?  வைரலாகும் விஜய் புகைப்படம் , அரசியல் வருகைக்கு முன்னோட்டமா ? | Vijay Meets Vijay Makkal Iyakkam Viral Photo

அப்போது அவர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களையும் அவர் தனது பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு உள்ள மக்கள் செல்வாக்கை வெளிப்படுத்தற்காகவே தற்போது இந்தப் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது அவரின் அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.  .