வைகோவை சந்தித்த விஜய்! வீட்டின் வாசலுக்கு வந்த வழியனுப்பினார்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
கூட்டம் நிறைவறைந்தவுடன் முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றார். அவரை உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார், இந்த சந்திப்பின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வை சந்திக்க சென்றார், துரை வைகோ வீட்டின் வாசலுக்கு வந்து பட்டு துண்டு போர்த்தி வரவேற்றார்.
வைகோ அவர்கள் முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்றதுடன் வீட்டின் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார், வைகோ- விஜய் இருவரும் ஒன்றாக இணைந்து கையசைத்ததால் தொண்டர்கள் உற்சாகமாகினர்.